செய்திகள் :

``ரூ.200 செலுத்தினால் சாதி, இருப்பிடச் சான்றிதழ்...'' தூத்துக்குடியில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்!

post image

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ளது கொம்பன்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில், ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இரண்டும் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக பிரபாகனி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இந்த அலுவலக காம்பவுண்ட் சுவரில் மர்மநபர்கள் திடீரென ஒரு நோட்டீஸை ஒட்டியுள்ளனர்.

பரபரப்பை கிளப்பியுள்ள போஸ்டர்

அதில், கொம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலகம் விலைப்பட்டியல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று பெற ரூ.200 கட்டணம். 15 நாள்களில் வழங்கப்படும்.  இறப்புச்சான்று கட்டணம் ரூ.300 (4 நாள்களில் வழங்கப்படும்), வாரிசு சான்று சான்றிதழ் ரூ.500 கட்டணம், அடங்கல், கூட்டுப்பட்டா ரூ.1,000 (ஒரு நாளில் வழங்கப்படும்), தனிப்பட்டாவிற்கு ரூ.4,000 கட்டணம் (30 நாளில் வழங்கப்படும்) ஜி.பே மூலம் பணம் செலுத்தலாம்.

கடன் அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் நோட்டீஸ் அப்பகுதி மக்களிடம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலக ஊழியர், ஒட்டப்பட்டிருந்த அந்த நோட்டீஸை கிழித்து அகற்றியுள்ளனர்.

பரபரப்பை கிளப்பியுள்ள போஸ்டர்

இதுகுறித்து கொம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலர் பிரபாகனியிடம் பேசினோம், “வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக யாரோ இப்படி ஒரு நோட்டீஸை ஒட்டியுள்ளனர். இந்த நோட்டீஸ் விவகாரம் தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.  இருப்பினும் இந்த நோட்டீஸ் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Ratan Tata: கடைசி வரை இருந்த வளர்ப்பு நாய், சமையல்காரர், உதவியாளருக்கு ரத்தன்டாடா எழுதிய உயில்..!

கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்து...தொழிலதிபர் ரத்தன் டாடா சமீபத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார். ரத்தன் டாடாவிற்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. ரத்தன் டாடா எப்போதும் வளர... மேலும் பார்க்க

Bengaluru: பயணிகளுக்கு கன்னடம் கற்றுக்கொடுக்கும் ஆட்டோ ஓட்டுநர்.. வைரலாகும் புது முயற்சி!

பெங்களூரில் கன்னடம் பேசும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கன்னடம் தெரியாதவர்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் ஒரு ஆட்டோக்காரர்.வட மாநிலத்தில் இருந்து வேலைக்காக பெங்களூரு... மேலும் பார்க்க

Irfan: தொப்புள் கொடி வீடியோ; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான் - நடந்தது என்ன?

தமிழில் பிரபல யூடியூபராக வலம் வருபவர் இர்ஃபான். இவர், யூடியூபில் தனக்கென ஒரு சேனலை வைத்து அதன் மூலம் பல கடைகளுக்குச் சென்று, அங்கிருக்கும் விதவிதமான உணவுகளை சாப்பிட்டு ரிவ்யூ செய்து வருகிறார். இவருக்க... மேலும் பார்க்க

``கொலை மிரட்டல்'' மனம் திறந்த சல்மான்; ``அவருக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்'' -முன்னாள் காதலி சோமி

கொலை மிரட்டல்..பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த மாபியா கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கின்றனர். சல்மான் கான் 1998ம் ஆண்டு ரா... மேலும் பார்க்க

Organ Donor: இதயத்தை அகற்றத் தயாரான மருத்துவர்கள்; கண் விழித்த இளைஞர்... அமெரிக்காவில் அதிர்ச்சி!

அமெரிக்காவின் கென்டக்கியில் வசிப்பவர் தாமஸ் டிஜே ஹூவர் (36). இவர் போதைப் பொருளை அதிகமாக உட்கொண்டதால் திடீரென மயங்கி விழுந்தார். உடனே குடும்ப உறுப்பினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோ... மேலும் பார்க்க

``நிறைய திருமணம் செய்து, திருமணத்தின் கடவுளாக வேண்டும்..'' - ஜப்பான் இளைஞரின் இலக்கு!

ஜப்பானின் ஹொக்கைடோவின் வடக்கு மாகாணத்தில் வசிப்பவர் ரியுதா வதனாபே. 36 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வாழ்ந்து வருகிறார். இவரின் பெரும் ஆசை... கனவு... திருமணத்தின் கடவுள் ஆக வேண்டும் ... மேலும் பார்க்க