செய்திகள் :

ரூ.6-க்கு தேநீர், ரூ.60-க்கு புர்ஜி பாவ்: சைஃப் அலிகான் வழக்கில் குற்றவாளி பிடிபட்டது எப்படி?

post image

மும்பை: நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்து அவரை கத்தியால் குத்திய வழக்கில் கைதான குற்றவாளி, மிகக் கொடுமையான ஏழ்மை காரணமாகவே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டுக்குள் ஊடுருவிய மர்மநபர், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பின்னணி மற்றும் அவரைக் கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்த தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.

அவர், சைஃப் அலிகான் வீடு என்று தெரிந்தெல்லாம் நுழையவில்லை. தோராயமாக ஒரு வீட்டை தெரிவு செய்திருக்கிறார். தானேவில் இயங்கி வந்த உணவகத்தில் பணியாற்றி வந்த ஷரிஃபுல், ஒப்பந்ததாரரின் ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்டதால் வேலையை இழந்துள்ளார். அதன்பிறகு, அவர் வறுமையில் உழன்றுள்ளார்.

வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்தபோது ஷரிஃபுல், சைஃப் அலிகானை ஆறு முறை கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று வீடு திரும்பினார்.

முகமது ஷரிஃபுல் என்ற அந்த நபர் தனது கிராமத்திற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது தானே பகுதியில் கைது செய்யப்பட்டார். அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒரு உணவகத்தில் பணியாற்றி ரூ.13 ஆயிரம் வருவாய் ஈட்டி வந்த நிலையில், அதில் வெறும் 1000 ரூபாயை தனக்காக வைத்துக்கொண்டு ரூ.12 ஆயிரத்தை தாயின் மருத்துவ செலவுக்கு அனுப்பி வந்துள்ளார். அந்த வேலை போனதும், கடுமையான வறுமை அவரை வாட்டியிருக்கிறது. இந்தநிலையில்தான் கொள்ளையடிக்கும் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், அவர் பணியாற்றி வந்த ஒப்பந்ததாரர் மூலம் அவரது இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சோதனை செய்ததில், ஒரு இ-வாலட் மூலம் வோர்லியில் அவர் ரூ.6க்கு தேநீர் வாங்கிய ரசீது கைப்பற்றப்பட்டது. அதன் மூலம், அவர் கடைசியாக எங்கிருந்தார் என்பதும், பிறகு அவர் ஜன. 18ஆம் தேதி ரூ.60 செலுத்தி புர்ஜி பாவ் வாங்கியதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதைவைத்தே, அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து கைது செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோயில் அருகே போதைப்பொருள் விற்பனை: தடை கோரிய மனு நிராகரிப்பு!

புது தில்லி: கோயில்களுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பொது நல மனுதாரரான அ... மேலும் பார்க்க

ரூ.1 கோடி வெகுமதி: 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நக்சல் தலைவரைக் காட்டிக்கொடுத்த செல்ஃபி!

ஏறக்குறைய முப்பது ஆண்டு காலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த நக்சல் மத்தியக் குழு உறுப்பினர், தனது மனைவியுடன் எடுத்த செல்ஃபி எப்படி அவருக்கு ஆபத்தாக முடிந்தது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒடிசா - ச... மேலும் பார்க்க

அதானி வீட்டு திருமணம்: ரூ. 5,000 கோடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

ஜீத் அதானியின் திருமணம் பெரும் பொருள் செலவில் நடைபெறவிருப்பதாகப் பரவிய வதந்திகளுக்கு கௌதம் அதானி மறுப்பு தெரிவித்துள்ளார்.தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்தாண்டு ஜூலை... மேலும் பார்க்க

மணிப்பூரில் பாஜக கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெற்றார் நிதீஷ் குமார்!

மணிப்பூரில் பாஜக கூட்டணிக்கான ஆதரவை நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் திரும்பப் பெற்றுள்ளது. மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிகார் முதல்வ... மேலும் பார்க்க

உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை சந்தித்த சைஃப் அலிகான்!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்னதாக தனது உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்து சைஃப் அலிகான் நன்றி தெரிவித்தார்.மும்பையில் கடந்த 16-ஆம் தேதி அதிகாலை சைஃப் அலி கான் வீட்டு... மேலும் பார்க்க

நடுத்தர மக்களுக்காக.. 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த ஆம் ஆத்மி!

நடுத்தர மக்களை மையமாகக் கொண்டு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கேஜரிவால் வெளியிட்ட விடியோ பதிவில், ஆம் ஆத்மி எம்பிக்கள் நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்னையை... மேலும் பார்க்க