கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இது கட்டாயம்! செய்யாவிட்டால்?
நாடு முழுவதும் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும், தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாளங்களை சரிபார்த்து முடித்திருக்க வேண்டும்.
ரேஷன் பொருள்கள் வாங்கும் கடைகளிலேயே அடையாளம் சரிபார்ப்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், இதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் அடையாளம் சரிபார்க்கப்படாவிட்டால், ரேஷன் அட்டைக்கு பொருள்கள் வழங்குவது நிறுத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாமல், குடும்ப அட்டையிலிருந்து கேஒய்சி எனப்படும் அடையாளம் சரிபார்க்கப்படாதவரின் பெயர் நீக்கப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், நாடு முழுவதும் ஒன்பது லட்சம் பேர் கேஒய்சி சரிபார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இறந்தவர்களின் பெயர்களை நீக்காமல் அவர்களது பெயர்களில் ரேஷன் பொருள்கள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளை சரி செய்யவே இந்த நடைமுறை தொடங்கியிருக்கிறது. எனவே, இதுவரை கேஒய்சி சரிபார்க்காதவர்கள், அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று கைவிரல் ரேகை வைத்து அடையாளத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.