சரியாக நள்ளிரவு 11.59க்கு கிடைத்த புரட்டாசி சனிக்கிழமை தரிசனம்! - 70களில் நடந்த ...
'ரோஹித், கோலி அடுத்த உலகக்கோப்பை அணியில் இடம்பெற, இத செய்யணும்' - சவுரவ் கங்குலி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்ட வேளையில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு முழுநேர பேட்ஸ்மனாக இடம் பெற்றிருக்கிறார். அதேவேளையில் அனுபவ வீரரான விராட் கோலிக்கும் இடம் கிடைத்திருக்கிறது.
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இனி தொடர்ந்து விளையாட இருக்கின்றனர்.
ஆனால் எதிர்வரும் 2027 உலக கோப்பை வரை அவர்கள் நீடிப்பது கடினம் என்றே பலரும் கூறி வருகின்றனர்.
ஏனெனில் அடுத்த உலக கோப்பை தொடரின் போது ரோகித் சர்மாவிற்கு 40 வயது, விராட் கோலிக்கு 38 வயதாகிவிடும்.
அதனால் அவர்களை இந்திய அணியின் நிர்வாகம் தேர்வு செய்யாது என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த உலக கோப்பை வரை அவர்கள் இருவரும் தாக்குப் பிடிக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியிருக்கிறார்.
``சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்தது சரியான முடிவு தான் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.
ஏனெனில் அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதனால் அதற்குள் அவர் நல்ல அனுபவத்தை கேப்டனாக கற்றுக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

அதேபோன்று இந்த முடிவு நிச்சயம் ரோஹித் சர்மாவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
வெளியில் இருந்து நாம் தெரியாமல் பேசக்கூடாது அணிக்குள் நிச்சயம் சரியான முறையிலேயே அனைத்து விவாதங்களும் நடைபெற்று இருக்கும்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
ஆனாலும் இன்னும் இரண்டு ஆண்டுகள் அவர்கள் தொடர்ந்து அணியில் நீடிக்க வேண்டுமெனில் தொடர்ச்சியாக உடற்தகுதியை பராமரிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி கிடைக்கும் நேரங்களில் எல்லாம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்.
அப்படி எத்தனை உள்ளூர் போட்டிகளில் அவர்கள் விளையாடுகிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் நல்ல டச்சுடன் இருப்பார்கள்.

எனவே தொடர்ச்சியாக உள்ளூர் போட்டியில் விளையாடினால் அவர்கள் இருவரும் அடுத்த உலக கோப்பை தொடரில் விளையாடலாம்" என்று கங்குலி கூறியிருக்கிறார்.