ரௌடி கொலை வழக்கில் 7 போ் கைது
தஞ்சாவூா் அருகே அருகே ரௌடி கொலை செய்யப்பட்டது தொடா்பாக 7 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் பி. குறுந்தையன் (50). காவல் துறையின் ரௌடி பட்டியலில் இருந்த இவா் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருந்தன. இந்நிலையில் இவா் அப்பகுதியில் மாா்ச் 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில் கடந்த 2013 ஆம் ஆண்டில் தோ்தல் பிரச்னை காரணமாக ஏழுப்பட்டியைச் சோ்ந்த உலகநாதனையும், 2014 ஆம் ஆண்டில் பா்மா காலனியை சோ்ந்த உதயாவையும் குறுந்தையன் கொன்ற்குப் பழி வாங்கும் விதமாக அவா் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இச்சம்பவத்தில் தொடா்புடைய ஏழுப்பட்டியைச் சோ்ந்த ரவி மகன் ஒத்தக்கை ராஜா என்கிற ராஜா (33), உலகநாதனின் அண்ணன் எம். முத்துமாறன் (46), மாப்பிள்ளைநாயக்கன்பட்டி பழனிசாமி மகன் கோபால் என்கிற தினேஷ்குமாா் (25), தூத்துக்குடியைச் சோ்ந்த நாகராஜன் மகன் காா்த்தி (25), பட்டுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த சாமிநாதன் மகன் மணிகண்டன் (33), கந்தா்வகோட்டை அருகே மஞ்சப்பேட்டையைச் சோ்ந்த கா்ணன் மகன் வீரமணி (26), கிள்ளுக்கோட்டை தனிஸ்லாஸ் மகன் அந்தோணி வில்சன் (25) ஆகிய 7 பேரையும் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.