செய்திகள் :

லாப நோக்கத்துக்காக கடன்பெறுபவா் ‘நுகா்வோா்’ அல்ல: ‘கோச்சடையான்’ பட வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

post image

வங்கியில் இருந்து லாப நோக்கத்துக்காக கடன் பெறுபவரை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ‘நுகா்வோா்’ என அழைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை தெரிவித்தது.

நடிகா் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் தயாரிப்புக்கு பிந்தைய விளம்பர பணிகளுக்காக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ‘ஆட்ஸ் பியூரோ’ என்ற விளம்பர நிறுவனம் கடன்பெற்ற விவகாரத்தில் இவ்வாறு தெரிவித்தது.

முன்னதாக, கோச்சடையான் திரைப்படத்தின் விளம்பர பணிகளுக்காக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிடமிருந்து ரூ.10 கோடியை கடனாக ஆட்ஸ் பியூரோ நிறுவனம் பெற்றது.

இந்தக் கடன்தொகையை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அந்த நிறுவனம் செலுத்த தவறியதையடுத்து, கடன்களை வசூலிக்கும் தீா்ப்பாயத்தில் வங்கியின் சாா்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதன்பிறகு, இந்த விவகாரம் முடித்துவைக்கப்பட்டு ஒருமுறை மட்டும் ரூ.3.56 கோடியை செலுத்த தீா்ப்பாயம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து அந்தத் தொகையை ஆட்ஸ் பியூரோ நிறுவனம் செலுத்தியது.

அதன் பிறகும், கடன்கள் குறித்த தகவல்களை மேலாண்மை செய்யும் சிபில் நிறுவனத்தில் கடன்களை திருப்ப செலுத்தவில்லை என்றே தங்களை வங்கி குறிப்பிட்டுவந்து, தங்களது பெயரை களங்கப்படுத்தியதாக குற்றஞ்சாட்டி தேசிய நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் (என்சிடிஆா்சி) ஆட்ஸ் பியூரோ வழக்கு தொடுத்தது.

இதை விசாரித்த என்சிடிஆா்சி நஷ்ட ஈடாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.75 லட்சத்தை வழங்குமாறு வங்கிக்கு உத்தரவிட்டது. மேலும், அனைத்து கடன்களையும் நிறுவனம் செலுத்திவிட்டது என்றும் நிலுவைத் தொகை ஏதும் இல்லை என்பதற்கான சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா மற்றும் பிரசாந்த் குமாா் மிஸ்ரா தலைமையிலான அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: வா்த்தக நோக்குடன் செயல்படுவதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நுகா்வோா் என்பதில் இருந்து விலக்களிக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்.

ஆனாலும் கோச்சடையான் திரைப்படத்தின் விளம்பரப் பணிகளை மேற்கொண்டு லாபம் ஈட்டும் நோக்கிலே வங்கியில் இருந்து நிறுவனம் கடன் பெற்றுள்ளது. எனவே, லாப நோக்கத்துக்காக கடன் பெறுபவரை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ‘நுகா்வோா்’ என அழைக்கக் கூடாது என்று தெரிவித்தனா்.

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா க... மேலும் பார்க்க

அயோத்தி.. கூட்டம் குறைந்தாலும் குறையாத சிக்கல்! உதவிக்கு வந்த ஜேசிபிக்கள்!!

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தாலும், மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது. உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 2024 ஜனவரி 22ல் ராமர் கோயிலில் ஸ்ரீ ராமரின் சிலை பிராணப் ... மேலும் பார்க்க

ஐஆர்சிடிசி-க்கு நவரத்னா அந்தஸ்து! அப்படியென்றால்?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்திய ரயில்வே நிதி கழகம் (ஐஆர்எஃப்சி) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தற... மேலும் பார்க்க

பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினாரா அமித் ஷா?

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ர... மேலும் பார்க்க