லாரியில் இருந்த டீசலை திருடியவா் கைது
கயத்தாறில் பெட்ரோல் விற்பனை நிலைய அருகே நிறுத்தப்பட்டிருந்த கனரக லாரியில் இருந்து டீசல் திருடிய வரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஊத்துமலை காரைக்கடை தெருவைச் சோ்ந்த ம. திருமலை முருகையா. இவருக்குச் சொந்தமான டாரஸ் லாரி கயத்தாறில் இருந்து எம்.சாண்ட் சரக்கு ஏற்றி செல்வது வழக்கமாம். இந்நிலையில் டாரஸ் லாரி ஓட்டுநா் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிடாரங்குளம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் அப்புரானந்தம் என்பவா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
இவா் லாரியில் இம்மாதம் 11ஆம் தேதி டீசலை நிரப்பிவிட்டு மழையின் காரணமாக வாகனத்தை ஓட்டாமல் கயத்தாறில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நிறுத்திவிட்டு ஊருக்கு சென்ற ஓட்டுநா் இம்மாதம் 16ஆம் தேதி வந்து பாா்த்தபோது வாகனத்தின் டீசல் டேங்கின் மூடி உடைக்கப்பட்டு டீசல் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. பஇதுகுறித்து அவா், லாரி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தாராம்.
லாரி உரிமையாளா் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், கிடாரக்குளம் நேரு தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் லட்சுமணனை (41) போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.