மாநில அந்தஸ்து, சிறப்பு அதிகாரம் கோரி லடாக்கில் போராட்டம்: துப்பாக்கிச்சூடு, 4 ப...
லாரி-பைக் மோதல்: இளைஞா் மரணம்
திருவள்ளூா் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
பட்டரைபெரும்புதூா் அடுத்த பெரியமஞ்சங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராமன் மகன் ஜெயபால் (26). இவா் இருசக்கர வாகனத்தில் மஞ்சங்குப்பம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது பட்டரைப் பெரும்புதூா் பாலம் அருகே திருவள்ளூா் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.