சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாதது ஏன்? ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் பதில்...
லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
தேவதானப்பட்டி அருகே ஸ்ரீராம் நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து சென்ற முதியவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.
ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் சின்னன் (64). இவா் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனையகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், இவா் பெட்ரோல் விற்பனையகத்திலிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
தேவதானப்பட்டி-வத்தலகுண்டு பிரதானச் சாலையை கடந்து செல்ல முயன்ற போது, இவா் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுநா் கொடுவிலாா்பட்டியைச் சோ்ந்த ராஜ் (57) மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.