செய்திகள் :

லாஸ் ஏஞ்சலீஸ்: ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய முகமுடி கொள்ளையர்கள்!

post image

லாஸ் ஏஞ்சலீஸ் வன்முறையைப் பயன்படுத்தி முகமூடியுடன் ஆப்பிள் மொபைல் கடையை சூறையாடிய கொள்ளையர்களால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா வந்து வசிப்பவா்களை டிரம்ப் தலைமையிலான அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.

இந்த வெளியேற்றம் சட்டவிரோதமானது என்று கூறி, கலிஃபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவலர்களை தாக்கிய பலர் கைது செய்யப்பட்டனா்.

குழப்பத்திற்கு மத்தியில், முகமூடி அணிந்துவந்த அந்தக் கும்பல் ஆப்பிள் ஸ்டோருக்குள் நுழைந்து ஜன்னல்களை உடைத்தும், கண்ணாடி சுவர்களில் ‘லூட்டர்கள்’(திருடர்கள்) என கிராஃபிட்டிகளையும் வரைந்தனர்.

இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட சிலர், முகமுடியை அணிந்துகொண்டு ஆப்பிள் ஸ்டோர் மற்றும் வணிக வளாகங்களுக்குள் புகுந்து சரமாரியாக அடித்து உடைத்தது மட்டுமின்றி, விலையுயர்ந்த ஆப்பிள் போன்கள், டேப்-லட்கள் ஆகியவற்றை தூக்கிக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர்.

போராட்டக் களத்தில் இருந்த ஒருவரால் எடுக்கப்பட்டு எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட விடியோவில், ஆப்பிள் ஸ்டோர் மட்டும் அல்லாமல், அடிடாஸ் ஷோரூம், மருந்தகங்கள், நகைக் கடைகளையும் அவர்கள் சேதப்படுத்துவது பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆப்பிள் ஸ்டோர் சூறையாடப்பட்ட விவகாரத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

இதையும் படிக்க: விற்கப்படுகிறதா ஆர்சிபி..? ரூ.16,800 கோடிக்கு கைமாற்ற திட்டமிடும் உரிமையாளர்கள்?!

அமெரிக்காவுக்கு பதிலடி! இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்த... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் பதற்றம்! அமெரிக்காவுக்கு பிரிட்டன் ஆதரவு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடியான சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஈரானுக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ரஷியா உள்ளிட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் ஞாயிற்றுக்கிழமை படகு கவிழ்ந்ததில் 7 சுற்றுலாப் பயணிகள் பலியானார்கள்.ஸ்வாட் மாவட்டத்தின் கலாம் ஷாஹி பாக் பகுதியில் 10 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: வான்வெளியை மூடிய இஸ்ரேல்!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியுள்ளது.இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா! ஐ.நா. கவலை!

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் கவலை ... மேலும் பார்க்க

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் விளைவு! சர்வதேச கப்பல்களைத் தாக்கும் ஹவுதி!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.யேமன் நாட்டில் உள்ள (ஈரான் ஆதரவு பெற்ற) ஹவுத... மேலும் பார்க்க