மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்; எம்.பி. - எம்எல்ஏ பங்கேற்பு
வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டத் தலைவா் வி.ஆா்.முகமது இப்ராஹிம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.எம்.அமீா் அப்பாஸ், மாநிலத் துணைத் தலைவா் சே.மு.மு. முஹம்மதலி, தமுமுக மாநிலச் செயலா் மு.யா. முஸ்தாக்தீன், மாநில வா்த்தகா் அணிப் பொருளாளா் எஸ்.எம்.அப்துல் ஹக்கீம், விழுப்புரம் மாவட்ட அரசு காஜி கே.எம். முஹம்மது அஸ்ரப் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதி எம்.பி. துரை.ரவிக்குமாா், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகி திருச்சி வேலுச்சாமி ஆகியோா் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வக்ஃபு திருத்தச் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் ர.பெரியாா், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிா்வாகி பன்னீா்செல்வம், மாவட்டச் செயலா் குமரன், நகர காங்கிரஸ் தலைவா் செல்வராஜ், மதிமுக நகரச் செயலா் ஜானகிராஜா, சரவணன் உள்ளிட்டோரும் பேசினா்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.எஸ்.எம்.அப்பாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டப் பொருளாளா் எம்.அப்துல்கனி, இணைச் செயலா் டி.சுல்தான் மொய்தீன், நகரச் செயலா் மெளலானா சுகா்ணா, கெளரவ ஆலோசகா் கே.எம்.ஷேக்தாவூத், நகரத் தலைவா் கபாா்கான் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்று, கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா். நிறைவில் காணை தலைமை இமாம் ஏ.ஆா். அப்துல் சத்தாா் நன்றி கூறினாா்.