செய்திகள் :

“வக்ஃப் வாரிய சட்டத்திருத்தம் வேண்டாமென்றால் ஏன் இந்து சமய அறநிலையத்துறை?” - வானதி சீனிவாசன் கேள்வி

post image

இன்று (ஏப்ரல் 3) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்த பின் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து, வக்ஃப் திருத்த மசோதா குறித்துப் பேசியிருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், "இன்று சட்டப்பேரவையில் மாநிலத்தின் முதலமைச்சர் ஸ்டாலின், பாராளுமன்றத்தில் வக்ஃப் சட்டம் நிறைவேற்றியது பற்றி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அரசியல் கட்சிக் கூட்டம் போலக் கோஷங்களை எழுப்பி சட்டப்பேரவையின் மாண்பினை இழிவுப்படுத்துவது போல மாநில அரசாங்கம் நடந்துக்கொண்டது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

வக்ஃப் திருத்தச் சட்டத்தில் இருக்கக்கூடிய விஷயங்களைப் பற்றி தெளிவாக விளக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில தகவல்களை இப்போது பகிர்ந்துகொள்கிறேன். நேற்று நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டம் திருத்தம் தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விவாதங்களில் பங்கேற்றார்கள்.

முதலில் இந்தத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது மத விவகாரங்களில் தலையிடுவதற்காக அல்ல, மத வழிப்பாட்டு உரிமைகளைப் புண்படுத்துவதற்காக அல்ல. அதேபோல சிறுபான்மை இஸ்லாமிய மக்களுடைய வழிப்பாட்டு உரிமைகளிலோ அல்லது அவர்களின் வழிப்பாட்டு முறைகளிலோ எந்த இடத்திலும் மத்திய அரசு மாற்றத்தைக் கொண்டு வரவில்லை.

உலக அளவில் எடுத்துக்கொண்டால் இந்தியாவில்தான் 8 லட்சத்திற்கும் அதிகமான வக்ஃப் சொத்துக்கள் இருக்கின்றன. ஆனால் இந்த சொத்துக்கள் என்பது முறையாகப் பாராமரிக்கப்படாததால், ஆவணங்களைப் பதிவு செய்யாமல் இருப்பதால் அந்தச் சொத்துக்களை முறையற்ற நபர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இதனால்தான் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவும்வகையில் இந்த வக்ஃப் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. சிறுபான்மையினர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதா? என்று அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

முழுக்க முழுக்க வக்ஃப் சொத்துக்களை உரிய வகையில் பாதுகாப்பது, நிர்வாகத்தைச் சரியாகக் கையாள வைப்பது, பெண்களுக்கான உரிமையைப் பெற்று தருவது, அவர்களையும் நிர்வாகத்தில் கொண்டு வருவது போன்ற பல நல்ல விஷயங்கள் இந்த வக்ஃப் திருத்த மசோதாவில் இடம்பெற்றிருக்கிறது. அதைத்தான் மத்திய ஆளும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது.

இஸ்லாமிய மக்களுடைய சொத்துக்களை அவர்கள்தான் நிர்வாகம் செய்ய வேண்டும், அவர்கள் நம்பிக்கையில் தலையிடக் கூடாது என்று திமுக அரசு கூறுகிறது. அப்போது ஏன் இந்து அறநிலையத்துறை என்ற ஒன்றை இந்த அரசு வைத்துக்கொண்டிருக்கிறது" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Trump: "Countries are calling us up, kissing ***" - உலக நாடுகளை கேலி செய்த ட்ரம்ப்!

"These Countries are Calling us up, kissing my a**"தேசிய குடியரசுக் கட்சி காங்கிரஸ் குழுவின் (NRCC) நன்கொடையாளர் விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசிய வார்த்தைகள் இவை. உலக நாடுகள் மீதான ... மேலும் பார்க்க

நீட் விலக்கு: `உச்ச நீதிமன்றம் அளித்துள்ள நம்பிக்கை'- அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதென்ன?

நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக திமுக தலைமையில் அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கிய கூட்டத்தில் பங... மேலும் பார்க்க