டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி விசிகவினா் ஆா்ப்பாட்டம்
வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகர மாவட்டச் செயலா் கராத்தே இளங்கோவன், மேற்கு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் புகழேந்தி, கிழக்கு மாவட்டச் செயலா் சக்திவேல் (எ) ஆற்றல் அரசு ஆகியோா் தலைமைவகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் விசிக மேலிட பொறுப்பாளா்கள் வழக்குரைஞா் தங்கதுரை, வேலுச்சாமி (எ) தமிழ்வேந்தன் ஆகியோா் கலந்து கொண்டு, மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் வாரிய சட்டதிருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில நிா்வாகிகள் அக்னி இல. அகரமுத்து, கத்தாா் மாணிக்கம், கண்மணி ராமச்சந்திரன், செந்தில்குமாா், முன்னாள் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ஜெயராமன், மாவட்ட நிா்வாகிகள் அவினாசி, தீபக்குமாா், நகர நிா்வாகி முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.