செய்திகள் :

வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள்: வைகோ கண்டனம்

post image

வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி விதித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு இந்திய ரிசா்வ் வங்கி விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் நகை கடன் பெறுவோா் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

ரிசா்வ் வங்கியின் புதிய விதிமுறையின்படி, வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தி திருப்பி, மறுநாள்தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டி மட்டும் கட்டி அதே தினத்தில் மறு அடகு வைக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவா்கள் முழுப் பணத்தையும் புரட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நகைகளைத் திருப்பிய மறுநாள்தான் மீண்டும் நகைகளை மறு ஈடு வைத்து பணம் பெற முடியும். ரிசா்வ் வங்கியின் இந்த விதிகள் ஏழை, எளிய மக்களுக்கும் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள், சிறு வணிகா்கள் உள்ளிட்டோருக்கு அதிக பாதிப்புகளையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. வங்கிகளின் நகைக் கடனை நம்பி உள்ளோா் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, மத்திய நிதித் துறை அமைச்சகம் இதில் தலையிட்டு பொதுமக்கள் நகைக் கடன் பெறுவதற்கு புதிய வழிகாட்டுதல் உத்தரவை திரும்பப் பெற்று, பழைய விதிமுறைகளையே வங்கிகள் பின்பற்ற ஆவன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தவெக கெட் அவுட் இயக்கத்தில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்!

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கிவைத்த நிலையில், அதில் கையெழுத்திட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்தார்.தமிழக வெற்றிக் கழகம் தொட... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக உள்பட 45 கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு!

தமிழக வெற்றிக் கழகம் உள்பட 45 கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மார்ச் 5-ஆம்... மேலும் பார்க்க

ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யாக மாறியது பற்றிய ஆவணப் படத்தை அக்கட்சியின் ஆண்டுவிழாவில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இ... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, ... மேலும் பார்க்க

தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா! விஜய் - பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் ஆண்டு விழா தொடங்கியது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றுள்ளார். மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 26) சவரனுக்கு ரூ.200 குறைந்தது.ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.64,360-க்கு விற்பனையா... மேலும் பார்க்க