Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
வங்கி ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு
கோவை ராமநாதபுரத்தில் வங்கி ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை ராமநாதபுரம் போலீஸ் கந்தசாமி தெருவைச் சோ்ந்தவா் அற்புதராஜ் (47), தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி சோபியா (45), பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு வங்கிக் கிளையில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், புதன்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனா். அப்போது அவா்களது வீட்டுக்கு அருகே வசித்து வரும் மாயா என்பவா் சோபியாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு அவரது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து சோபியா தனது கணவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தானும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது.
பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 23 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.35,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சோபியா அளித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.