வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!
வசந்த் ரவி நடிப்பில் வெளியான இந்திரா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தரமணி, ராக்கி, ஜெயிலர் படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகரான வசந்த் ரவியின் இந்திரா திரைப்படம், கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
A blind ex-cop. A murdered wife. A past that refuses to stay buried. Watch Indira on SunNXT, Premiers Sep 19.#Indira#CrimeThriller#BlindJustice#DarkPast#RevengeSaga#ThrillerDrama#CopStory#SuspenseUnfolds#EdgeOfSeat#SunNXTpic.twitter.com/9RKkMDK1b8
— SUN NXT (@sunnxt) September 15, 2025
சபரிஸ் நந்தா இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகர்கள் கல்யாண், சுனில், மெஹ்ரீன் பிர்சாதா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
பெண்கள் கொலைப்படுகின்றனர், அதைச் செய்தது யார் என்பதை மையப்படுத்தி கிரைம் திரில்லர் பாணியில் இந்திரா படம் எடுக்கப்பட்டது.
இந்திரா படத்துக்கு அஜ்மல் தஸ்சின் இசையமைத்துள்ளார். ஜேஎஸ்எம் புரடக்ஸன் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தது.
இந்த நிலையில், இந்திரா திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வரும் செப். 19 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!