செய்திகள் :

வடமாநிலங்களைப் போல இங்கே பிரச்னை உருவாக்க நினைக்கிறார்கள்: அமைச்சர் சேகர் பாபு

post image

தமிழ்நாட்டில், அண்ணாமலை, ஹெச்.ராஜா ஆகியோர் வட மாநிலங்களைப் போல இங்கேயும் பிரச்சினையை உருவாக்க நினைக்கிறார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சிக்கு ஒரு அபாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நேற்றைய போராட்டம் ஒரு தேவையற்ற போராட்டம் என்றும் கூறினார்.

பெரியார் மண்ணில் திராவிட மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஒரு காலமும் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டார் என்றார் அமைச்சர் சேகர்பாபு.

சென்னை ஓட்டேரி அருள்மிகு படவேட்டம்மன் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேசியதாவது, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. பொதுமக்கள், பக்தர்களின் அனைத்தும் தேவையும் நிறைவேற்றி முதன்மையான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது.

இதுவரை 2504 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 1000 ஆண்டுகளுக்கு மேலான 49 திருக்கோயில்களின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஆதி படவேட்டம்மன் திருக்கோயில் குடமுழுக்கு வருகிற மார்ச் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது.

இதுவரை 7154 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் 3000-துக்கும் மேற்பட்ட கோயில்களின் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

திருப்பரங்குன்றம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என குறிப்பிட வேண்டாம். பாஜகவினர் என்று தான் குறிப்பிடுவேன். இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.நேற்றைய போராட்டம் ஒரு தேவையற்ற போராட்டம்.

அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், இந்துக்கள் போன்ற மக்களே தேவையற்ற ஒரு பிரச்சனை என்று கூறியிருக்கிறார்கள். அண்ணாமலை மற்றும் எச் ராஜாவிற்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம். எங்கள் முதல்வர் எங்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தி இருக்கிறார். வட மாநிலத்தைப் போன்று கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறீர்கள்.

எங்கள் முதல்வர் எங்கு கலவரம் ஏற்பட்டாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கிறார். பெரியார் மண்ணில் திராவிட மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஒரு காலமும் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டார்.

திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் மாமன், மச்சானாக சகோதரத்துவம் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். திருப்பரங்குன்றம் போன்ற கோயில் பிரச்னையை எடுத்ததால் பாரதிய ஜனதா கட்சிக்கு பூஜ்ஜிய வாக்கு சதவீதம் கூட கிடைக்கப்போவதில்லை.

இதை வைத்து அரசியல் ஆக்க வேண்டாம். திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி அதில் குளிர்காய நினைக்கிறார்கள். அண்ணாமலை, ஹெச்.ராஜா ஆகியோர் வட மாநிலம் போல இங்கே பிரச்சினையை உருவாக்க நினைக்கிறார்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்படும்.

துறை அமைச்சர் என்ற முறையில் விரைவில் திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்ல உள்ளேன். வருகிற ஏப்ரல் - மே மாத இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் ராகுல், அகிலேஷ்!

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் திமுக மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தில்லி ஜந... மேலும் பார்க்க

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தில்லியில் நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டத்தில், செ... மேலும் பார்க்க

மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதாவுக்கு பதிலாக புதிய நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் அத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ஜோவிதாவுக்கு பதிலாக நடிகை ஃபெளசி அத்தொடரில் நாயகியாக நடிக்கவுள்... மேலும் பார்க்க

காலியாக இயக்கப்பட்ட கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவையிலிருந்து திண்டுக்கல் இடையே இன்று முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.ஆனால், இந்த சிறப்பு ரயில் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் முதல் ந... மேலும் பார்க்க

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 7 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஏழு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.வெ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மா... மேலும் பார்க்க