சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை: உச்சநீதிமன்றம்
வடிவேலுவின் கேங்கர்ஸ் வெளியீடு எப்போது?
நடிகர் வடிவேலு - சுந்தர். சியின் கேங்கர்ஸ் பட வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகராக தன் பயணத்தை தொடங்கிய நடிகர் வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஏராளம். சிலகாலம் நடிக்காமல் இருந்துவருக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
காரணம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து, ஃபஹத் - வடிவேலு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ’மாரீசன்’ படத்தின் அறிவிப்பு வெளியானது. அப்படமும், வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
இதையும் படிக்க: ‘மணிகண்டன் நிச்சயம் அதைச் செய்வார்...’: புஷ்கர் காயத்ரி
தற்போது, சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் கேங்கர்ஸ் படத்தின் வெளியீட்டுத் தேதி நாளை (மார்ச். 4) அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தை சுந்தர். சி இயக்க பென்ஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இது முழு நகைச்சுவை படமாக உருவாகப்படுவதாகத் தகவல்.