செய்திகள் :

வண்டலூர் பூங்கா: 80,000-க்கும் மேற்பட்டோர் வருகை!

post image

பொங்கல் வாரத்தில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் உள்பட 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது பற்றி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இந்த பொங்கல் வாரத்தில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் உள்பட 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.

பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், பூங்கா நிர்வாகம், சம்பந்தப்பட்ட பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து, அனைத்து பார்வையாளர்களின் வசதியையும் உறுதிப்படுத்த விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

* பார்வையாளர்கள் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் பெற ஊக்குவிக்கப்பட்டனர். மேலும், இலவச Wi-Fi வசதியும் வழங்கப்பட்டது. கூடுதலாக, பண பரிவர்த்தனைகளுக்கு தனி கவுன்டர்கள் இருந்தன. மேலும், தனி டிக்கெட் கவுண்டர்களும் அமைக்கப்பட்டது.

* இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்காக தனி வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டு 8000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பயன்படுத்தப்பட்டது. வாகன நிறுத்ததுமிடத்திலிருந்து பூங்காவிற்கு பார்வையாளர்கள் வர இலவச பேருந்து வசதி அமைத்து தரப்பட்டது.

* சுமார் 6000-க்கும் மேற்பட்ட 8 வயதுக்குள்பட்ட குழந்தை பார்வையாளர்களுக்கு பெற்றோரின் தொடர்பு எண்ணுடன் கை வளையம் வழங்கப்பட்டது.

* கூடுதலாக 15 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், 24 உயிர் கழிப்பறைகள் மற்றும் ஆவின் பாலக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டன.

* நான்கு இடங்களில் அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் கொண்ட மருத்துவக் குழு மற்றும் உதவி மையங்கள், அமைக்கப்பட்டது. இதை, 5000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பயன்படுத்தினர். ஒரு தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: நீட் தேர்வு தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!

* பார்வையாளர்களின் நடமாட்டத்தை கட்டுப்பாட்டு அறையிலிருந்து CCTV அமைப்பு மூலம் கண்காணிக்கப்பட்டு கூட்டத்தை வழிநடத்த சரியான வழிமுறைகள் வழங்கப்பட்டன.

* 90 சீருடை அணிந்த வன ஊழியர்கள், 150 காவல்துறை பணியாளர்கள் மற்றும் 50 NCC மாணவர்கள் கூட்டத்தை நிர்வகிப்பதற்கும் பார்வையாளர் உதவிக்காகவும் செயல்பட்டனர்.

* பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்த பூங்காவின் முக்கிய இடங்களில் தகவல் மற்றும் வழிசெலுத்தல் பலகைகள் நிறுவப்பட்டன.

* பூங்காவின் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல தனி வழியும், வெளியேறி பேருந்து நிறுத்தத்தை அடைய தனி வழியும் ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் பார்க்க விரும்புகிறேன்: குகேஷ்

செஸ் போட்டி ஒலிம்பிக்கில் இடம்பெறுவதைப் பார்க்க விரும்புவதாக உலக செஸ் சாம்பியன் குகேஷ் தெரிவித்துள்ளார்.சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனாக வலம் வந்த சீனாவின் டி... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் ஏஸ் கிளிம்ஸ் விடியோ!

விஜய் சேதுபதியின் பிறந்த நாளையொட்டி ஏஸ் படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடத்தைப் பெற்றார்.பொங்கல் பண்டிகையையொட்டி, அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வர் உத... மேலும் பார்க்க

பாட்டல் ராதா டிரைலர் அறிவிப்பு!

பாட்டல் ராதா படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.இயக்குநர் பா. இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.பரியேறும் பெருமாள் ப... மேலும் பார்க்க

ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் வி்ண்வெளி ஆய்வு மையத்தில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க பி... மேலும் பார்க்க

காசிமேட்டில் மீனவர் வெட்டிக் கொலை! 8 பேர் கைது!

காசிமேட்டில் மீனவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை புது வண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (33). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். ... மேலும் பார்க்க