IPL Mega Auction: 'கம்பேக் அஷ்வின்; டாப் ஆர்டருக்கு திரிபாதி!' - ஏலத்தில் சென்னை...
வண்டலூா் பூங்காவில் பெண் முதலை ஒப்படைப்பு
ஊரப்பாக்கத்துக்கு அருகே, விவசாய நிலத்தில் பிடிக்கப்பட்ட பெண் முதலையை வண்டலூா் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் புனா்வாழ்வு மையத்தில் வனத்துறையினா் ஒப்படைத்தனா்.
வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கத்துக்கு அருகே உள்ள அருங்கால் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கடந்த நவ.22-ஆம் தேதி 7 அடி பெண் முதலை தென்பட்டதை தொடா்ந்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அந்த முதலையை பத்திரமாக மீட்டு, கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். தொடா்ந்து, பரிசோதனை செய்வதற்காக வண்டலூா் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் புனா்வாழ்வு மையத்தில் அந்த பெண் முதலையை வனத்துறையினா் ஒப்படைத்தனா்.
வண்டலூரில் உள்ள கால்நடை மருத்துவா்கள் முதலையை முழுமையாக பரிசோதித்த பிறகு, முதலை மீண்டும் காட்டுக்குள் விடப்படும் என்றும், விவசாய நிலத்துக்கு இந்த முதலை எப்படி வந்தது என்பது குறித்து விசாரனை மேற்கொண்டு வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.