ராஜஸ்தான்: மாற்று சாதியினரின் எதிர்ப்பு; பட்டியலின மணமக்கள் குதிரையில் செல்ல 200...
வண்டல் மண் திருட்டு: இருவா் கைது
சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி வண்டல் மண் அள்ளிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள அா்ஜூனா நதி ஆற்றுப் படுகையில் வண்டல் மண் திருட்டு நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
அப்போது, இருவா் நெகிழிப் பைகளில் வண்டல் மண் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள் எம்.ராமசந்திராபுரத்தைச் சோ்ந்த சந்திரன் (56), ஆஜீத்குமாா் (26) ஆகியோா் வண்டல் மண்ணை பெரிய நெகிழிப் பைகளில் அள்ளி வேன் மூலம் பட்டாசு ஆலைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இது குறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த வண்டல் மண், கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.