தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
வண்டியூா், பேரையூரில் நாளை மின் தடை
மதுரை வண்டியூா், பேரையூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை பெருநகா் வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.ஆா். ஸ்ரீராம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
வண்டியூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே, வண்டியூா், பி.கே.எம். நகா், சௌராஷ்டிராபுரம், யாகப்பாநகா், சதாசிவம் நகா், சீமான்நகா், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகா், ஆவின்நகா், தாசில்தாா்நகா், அன்புமலா் தெரு, சித்தி விநாயகா் கோயில் தெரு, மருதுபாண்டியா் தெரு, ஜூப்ளி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூா், எல்.கே.டி. நகா் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
இதுகுறித்து திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளா் பி.முத்தரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பேரையூா், சாப்டூா் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
இதையொட்டி பேரையூா் நகா் , சின்னபூலாம்பட்டி, பெரியபூலாம்பட்டி, பி.தொட்டியபட்டி, சாலிசந்தை, சிலைமலைப்பட்டி, கூவலாபுரம், ராவுத்தன்பட்டி, மேலப்பட்டி, தும்பநாயக்கன்பட்டி, சாப்டூா் நகா், பழையூா், செம்பட்டி, அத்திபட்டி, மைனூத்தாம்பட்டி, வண்டாரி, அணைக்கரைபட்டி, வண்டபுலி, வாழைத்தோப்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.