டிரம்ப் நியமித்த புதிய தூதருக்கு மலேசியாவில் கடும் எதிர்ப்பு! போராட்டத்தில் மக்க...
வந்தே பாரத்: 'உங்கள் ஸ்டேஷனுக்கு ரயில் வர 15 நிமிடங்கள் தான் இருக்கிறதா?' - டிக்கெட் புக் செய்யலாம்!
வந்தே பாரத் ரயில்களின் டிக்கெட் புக்கிங்கில் புதிய மாற்றம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது தெற்கு ரயில்வே துறை.
இனி, உங்கள் ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, அந்த ரயிலில் டிக்கெட் புக் செய்துகொள்ளலாம். இது காலி சீட் இருந்தால் மட்டுமே பொருந்தும்.
உதாரணம்
உதாரணத்திற்கு, சென்னையில் இருந்து கோவை செல்கிற வந்தே பாரத் ரயிலை எடுத்துகொள்வோம். இந்த ரயில் சென்னை - சேலம் - ஈரோடு - திருப்பூர் - கோவை வழியில் செல்லும்.
நீங்கள் ஈரோட்டில் இருந்து கோவை செல்ல வேண்டும். குறிப்பிட்ட வந்தே பாரத் ரயிலில் காலி சீட் இருக்கிறது. அப்போது, நீங்கள் அந்த ரயில் ஈரோடு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு கூட, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து, அந்த ரயிலில் பயணிக்கலாம்.
ஆனால், இதுவரை எந்த ரயில் நிலையத்திற்கு ஏற வேண்டுமானாலும், இந்த ரயில் சென்னையில் இருந்து கிளம்புவதற்கு முன்பு தான், டிக்கெட் புக் செய்ய முடியும் என்கிற நிலை இருந்தது.
இனி அப்படி எல்லாம் இல்லை. உங்கள் ரயில் நிலையத்திற்கு ரயில் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு டிக்கெட் புக் செய்துகொள்ளலாம்.
இது எந்தெந்த ரயில்களில்?
இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தெற்கு வந்தே பாரத் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்த ரயில்கள்...
1. சென்னை சென்ட்ரல் - விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
2. சென்னை எழும்பூர் - நாகர்கோயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
3. கோவை - பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
4. மங்களூரு சென்ட்ரல் - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
5. மங்களூரு சென்ட்ரல் - மட்காவ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
6. மதுரை - பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
7. திருவனந்தபுரம் - மங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
8. நாகர்கோயில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்