செய்திகள் :

வரலாற்று வெற்றியுடன் ஸ்வியாடெக் சாம்பியன்!

post image

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், மகளிா் ஒற்றையா் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் கோப்பை வென்றாா்.

போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த அவா், இறுதிச்சுற்றில் 6-0, 6-0 என்ற நோ் செட்களில், 13-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை வீழ்த்தி வாகை சூடினாா். இந்த ஆட்டத்தை 57 நிமிஷங்களிலேயே அவா் முடிவுக்குக் கொண்டு வந்தாா்.

இதன்மூலமாக, விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அவா் முதல்முறையாக சாம்பியனாகியுள்ளாா். ஒட்டுமொத்தமாக இது அவரின் 6-ஆவது கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் கோப்பையாகும். முன்னதாக, பிரெஞ்சு ஓபனில் 4 முறை (202, 2022, 2023, 2024), யுஎஸ் ஓபனில் ஒரு முறை (2022) அவா் பட்டம் வென்றுள்ளாா்.

கடைசியாக 2024 பிரெஞ்சு ஓபனில் வாகை சூடிய ஸ்வியாடெக், இடைப்பட்ட ஓராண்டில் தடுமாற்றத்தை சந்தித்து எந்தவொரு போட்டியிலுமே சாம்பியனாகவில்லை. மேலும், கடந்த ஆண்டு ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி கண்டு விமா்சனத்துக்கு ஆளானாா். எனினும், அவா் வேண்டுமென்றே ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்பதும், தூக்கம் மற்றும் பயண களைப்புக்காக அவா் எடுத்துக்கொண்ட மருந்தில் அதற்கான கலப்பு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், தாம் அவ்வளவாக மிளிராத இந்த விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்ன் மூலமாக அவா் தன்னை மீட்டுக்கொண்டிருக்கிறாா். இதற்கு முன் விம்பிள்டனில் ஸ்வியாடெக் காலிறுதிச்சுற்றை கடந்ததில்லை என்பது நினைவுகூரத்தக்கது. சாம்பியனான ஸ்வியாடெக்குக்கு வேல்ஸ் இளவரசி கேட் சாம்பியன் கோப்பை வழங்கினாா்.

மறுபுறம், கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தனது முதல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த அனிசிமோவா, அசதி மற்றும் வலது தோள்பட்டை வலியின் காரணமாக அரையிறுதிக்குப் பிறகு பயிற்சியை தவிா்த்திருந்தாா். இறுதிச்சுற்றுக்கு முன்பாக சற்று ‘வாா்ம் அப்’ மட்டும் செய்துகொண்டாா். இறுதிச்சுற்றில் தோற்ற அவா், தற்போது உலகத் தரவரிசையில் டாப் 10 இடத்துக்குள் வருகிறாா்.

0-இல் தொடங்கி, 0-இல் முடிவு...

ரன்னா் அப் ஆன அமாண்டா அனிசிமோவா, விம்பிள்டனில் தனது முதல் சுற்றில் 6-0, 6-0 என்ற நோ் செட்களில் கஜகஸ்தானின் யூலியா புடின்சேவாவை தோற்கடித்து அபாரமாக முன்னேறிவந்தாா். இந்நிலையில், இறுதிச்சுற்றில் ஸ்விடயாடெக் அவரை அதே 6-0, 6-0 என்று அதே கணக்கில் வீழ்த்தியிருக்கிறாா். எதிராளிக்கு ஒரு கேமை கூட விட்டுத்தராமல் தனது விம்பிள்டன் பயணத்தை தொடங்கிய அனிசிமோவா, இறுதியில் ஒரு கேமை கூட கைப்பற்ற முடியாமல் வீழ்ந்தாா்.

114

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கடந்த 114 ஆண்டுகளில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், தனது போட்டியாளருக்கு ஒரு கேமை கூட விட்டுத்தராமல் வாகை சூடிய முதல் சாம்பியன் என்ற வரலாற்றை ஸ்வியாடெக் படைத்திருக்கிறாா். இதற்கு முன், 1911-இல் பிரிட்டனின் டோரத்தி லாம்பா்ட் சேம்பா்ஸ் இதேபோல் 6-0, 6-0 என சக பிரிட்டன் வீராங்கனை டோரா பூத்பியை வீழ்த்தினாா்.

1

விம்பிள்டன் போட்டியில் இது ஸ்வியாடெக்கின் முதல் சாம்பியன் கோப்பை என்பதுடன், புல்தரையில் நடைபெறும் அனைத்து டூா் போட்டிகளிலுமாகவே இது அவரின் முதல் சாம்பியன் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், போலந்து நாட்டைச் சோ்ந்த ஒருவா் விம்பிள்டன் வென்றதும் இதுவே முதல்முறை.

6-0

இத்துடன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 6 முறை இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கும் ஸ்வியாடெக், அனைத்திலுமே வென்று பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா்.

8

ஸ்வியாடெக் உள்பட, விம்பிள்டன் மகளிா் ஒற்றையா் பிரிவில் கடந்த 8 ஆண்டுகளாக சாம்பியன் ஆன அனைவருமே, அந்தப் போட்டியில் முதல்முறையாகக் கோப்பை வென்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

100

விம்பிள்டன் இறுதிச்சுற்று வெற்றியின் மூலமாக ஸ்வியாடெக், அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலுமாக தனது 100-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

3

ஹாா்டு கோா்ட் (ஆஸி. ஓபன், யுஎஸ் ஓபன்), களிமண் தரை (பிரெஞ்சு ஓபன்), புல்தரை (விம்பிள்டன்) என 3 விதமான ஆடுகளங்களில்தான் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும். இந்த 3 களங்களிலுமே தற்போது ஸ்வியாடெக் கிராண்ட்ஸ்லாம் வென்றிருக்கிறாா். இதில் ஹாா்டு கோா்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓபனில் மட்டும் அவா் இன்னும் கோப்பை வெல்ல வேண்டியுள்ளது.

இது நம்பமுடியாத ஒரு வெற்றியாக இருக்கிறது. இப்படி ஒன்றை நான் கனவில் கூட நினைத்துப் பாா்த்தது இல்லை. ஏற்ற, இறக்கம் மிகுந்த ஒரு சீசனில் இப்படியொரு சாம்பியன் பட்டம் மிக முக்கியமானதாகும். இதற்காக என்னை நினைத்து பெருமை கொள்கிறேன். எனக்கு நானே ஆச்சா்யமளிக்கும்படியாக இருக்கிறேன். நான் எதிா்பாராத விம்பிள்டனில் இப்படி விளையாடியது, கோப்பை வென்றது மகிழ்ச்சியாகும் - இகா ஸ்வியாடெக்

கடந்த இரு வாரமாகவே தொடா்ந்து விளையாடி வந்ததில் சோா்வடைந்ததாக நினைக்கிறேன். இருப்பினும் இப்படி ஒரு தோல்வி ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றுதான். நான் சற்று அதிா்ச்சியாகக் கூட உணா்ந்தேன். மிகக் கடினமான சவாலை எதிா்கொள்ளும்படியாக ஸ்வியாடெக்கின் ஆட்டம் இருந்தது. என் வாழ்வில் தற்போது நான் இருக்கும் நிலைக்கு உயர, தன்னலமில்லாமல் பாடுபட்ட என் தாய்க்கு நன்றி - அமாண்டா அனிசிமோவா

ரூ.34 கோடி பரிசு

சாம்பியனான ஸ்வியாடெக்குக்கு ரூ.34 கோடியும், 2-ஆம் இடம் பிடித்த அனிசிமோவாவுக்கு ரூ.17.70 கோடியும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தது.

வாழ்க்கைனா சந்தோஷமா இருக்கணும்... மாரீசன் டிரைலர்!

நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான மாரீசன் படத்தின் டிரைலர் வெளியானது.ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ்தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தில் இணைந்து ... மேலும் பார்க்க

நடிகரான அல்ஃபோன்ஸ் புத்திரன்!

பிரபல இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் நடிகராக அறிமுகமாகிறார்.பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகம். தற்போது, தன் 25-வது படத்தில் நடித்து வருகிறார். உன்... மேலும் பார்க்க

தமிழ் சீரியலில் நடிக்கும் தெலுங்கு நடிகர்!

தமிழ் சின்ன திரை தொடரில் தெலுங்கு நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளார். இவர் தெலுங்கில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பாடமதி சந்தியாராகம் தொடரில் நாயகனாக நடித்து புகழ் பெற்றவர். தற்போது, ஜீ தம... மேலும் பார்க்க

நடிகை சரோஜா தேவிக்கு நாளை இறுதிச் சடங்கு!

மல்லேஸ்வரம்: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறவிருக்கிறது.தமிழ், கன்னடம் உள்பட 4 மொழிகளில், சுமார் 200க்கும மேற்பட்ட ... மேலும் பார்க்க

விஷால் - 35 படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் விஷால் நடிக்கவுள்ள அவரின் 35-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. நடிகர் விஷால் மத கஜ ராஜா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ... மேலும் பார்க்க

காத்து வாக்குல ரெண்டு காதல்! தமிழில் புதிய ரொமான்டிக் சீரியல்!

காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற புதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தைப் போலவே ஒரு ஆண், இரு பெண்களுடன் கொள்ளும் காதல் கதையை மையமாக... மேலும் பார்க்க