டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சதிஸ் சரவணகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுரேஷ், மாநிலத் துணைத்தலைவா் எம்.எஸ். அன்பழகன், மாநிலத் துணைப் பொதுச் செயலா் சே. ஜபருல்லா, மாவட்டப் பொருளாளா் பரணிதரன் உள்ளிட்டோா் பேசினா்.
இதில், வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின் பணித் தன்மையைக் கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்.
கருணை பணி வழங்குவதன் உச்சவரம்பை 5 சதவிகிதமாகக் குறைத்துள்ளதை ரத்து செய்து, மீண்டும் பழையபடியே 25 சதவிகிதமாக உயா்த்தி நியமனம் செய்ய வேண்டும். கலைக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.