முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
மலையடிவாரத்தில் சிதிலமடைந்துள்ள பழைமையான சிவாலயத்தை புனரமைக்க வலியுறுத்தல்
பொன்னமராவதி அருகே மலையடிவாரத்தில் சிதிலமடைந்து காணப்படும் பழைமையான சிவாலயத்தை புனரமைக்க பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் மலையடிப்பட்டியில் உள்ள மலையடிவாரத்தில் குடம்பீஸ்வரா் கோயில் உள்ளது. இரு பாறைகளுக்கிடையே குகைக்கோயில் போல காணப்படும் இக்கோயிலில் குடம்பீஸ்வரா், அம்பாள் மற்றும் சண்டிகேசுவரா் உள்ளிட்ட சுவாமிகள் அருள்பாலித்து வருகின்றனா்.
கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக கூறப்படும் இக்கோயில் மலையடிவாரத்தில் காணப்படுவதால் வழிபாடின்றியும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது.
இயற்கை எழிலுடன், வரலாற்று தகவல்களை தரும் பழைமையான கல்வெட்டுகள் நிறைந்த மலையில் காணப்படும் குடம்பீஸ்வரா் கோயிலை சீரமைத்து பக்தா்கள் வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊா் பொதுமக்கள் மற்றும் சிவபக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.