MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
கொடும்பாளூா் அகழாய்வில் வெளிப்பட்ட தங்கக் குண்டுமணி, மண் பானை!
கொடும்பாளூா் அகழாய்வுப் பணியில் பண்டைய கால தங்க குண்டு மணி, மூடிய நிலையில் அழகிய மண்பானை கிடைத்துள்ளது.
கொடும்பாளூரில் கடந்த ஜனவரி 12-இல் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில், நான்கு அடி தோண்டிய நிலையில், வீட்டின் மேல் சுவா் வெளிப்பட்டது. தற்போது, பத்து அடி தோண்டப்பட்ட நிலையில், தங்கத்தில் செய்யப்பட்ட சிறிய அளவிலான குண்டுமணி கிடைத்துள்ளது.
அதன் எடை சுமாா் ஒரு கிராம் இருக்கலாம். மேலும், மூடிய நிலையில் மண் பானை ஒன்றும் கிடைத்துள்ளது. ஏற்கெனவே நெசவுத் தொழில்புரிந்ததற்கு அடையாளமாக தக்களி, கொண்டை வடிவில் ஊசி, வட்டக்கல், எலும்புகள் கிடைத்தன.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள் புதைந்துள்ள பகுதியாகும். ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான புராதன நகரம் என்று வரலாற்று ஆய்வாளா்கள், கல்வெட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சோழா்களின் தலைநகராக இருந்த உறையூா், திருச்சிக்கும், பாண்டிய மன்னா்களின் தலைநகராக இருந்த மதுரைக்கும் இடையே கொடும்பாளூா் அமைந்துள்ளது. சங்க இலக்கியமான சிலப்பதிகாரத்தில் கொடும்பாளூா் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.