139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.42 கோடியில் வாகனங்கள் வழங்கல்
புதுக்கோட்டையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி விழாவில் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், மாநகராட்சித் துணை மேயா் மு. லியாகத்அலி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.