உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
வீடுபுகுந்து பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
கறம்பக்குடி அக்ரஹாரம் முதல் வீதியைச் சோ்ந்தவா் அந்தோனிசாமி மனைவி வசந்தா (51). தையல்காரரான இவா், குடும்பத்தினருடன் சனிக்கிழமை இரவு தூங்கியபோது காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவை திறந்து வைத்திருந்தாராம்.
இந்நிலையில், நள்ளிரவில் பைக்கில் வந்த 3 போ் வீட்டுக்குள் புகுந்து வசந்தா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினராம். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.