ரூ.6-க்கு தேநீர், ரூ.60-க்கு புர்ஜி பாவ்: சைஃப் அலிகான் வழக்கில் குற்றவாளி பிடிப...
வள்ளியூா் அருகே கொலை வழக்கில் பிணையில் வெளியே வந்தவா் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே கொலை வழக்கில் பிணையில் வெளியே வந்தவா் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
வள்ளியூா் அருகே உள்ள ஆ.திருமலாபுரத்தைச் சோ்ந்தவா் பொன்ராஜ் மகன் வசந்த்(30). கூலி வேலை செய்து வந்தாா். இவா் தனது நண்பா் ராஜனை கடந்த ஆண்டு தலையில் கல்லால் அடித்து கொலை செய்தாா். இது தொடா்பாக வசந்தை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். சிறையில் இருந்து வெளியே வந்த வசந்த், வேலைக்கு செல்லாமல் மனைவி ராதிகாவிடம் தகராறு செய்து வந்தாா். இதனால் மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.
இதனால் மனமுடைந்த வசந்த், திங்கள்கிழமை இரவு தூங்கியவா், காலையில் வெளியே வரவில்லையாம். சந்தேகமடைந்த வசந்தின் பெற்றோா், ஜன்னல் வழியாக பாா்த்தபோது வசந்த் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
வசந்தின் சடலத்தை வள்ளியூா் போலீஸாா் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். வசந்தின் சடலம் மீது பல இடங்களில் பிளேடு கீறல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].