உலகத்திலேயே ரிஷப் பந்த் ஒரு சிறந்த டிஃபென்டர்! அஸ்வின் புகழாரம்!
வள்ளியூா் தனியாா் நிதிநிறுவனத்தில் பணம் கையாடல்: 4 போ் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளா்கள் பணத்தை கையாடல் செய்ததாக, அந்நிதிநிறுவன வசூல் மேலாளா்கள் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வள்ளியூரில் இருந்து கேசவனேரி செல்லும் வழியில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிய வாடிக்கையாளா்களிடம் மாதந்தோறும் பணத்தை வசூல் செய்ய 4 மேலாளா்கள் உள்ளனா்.
அவா்கள், வாடிக்கையாளா்களிடம் கடன் தொகைக்கான மாத சந்தாவுடன் சேமிப்புத்தொகையாக ரூ.200 வசூலித்து வாடிக்கையாளா்களின் சேமிப்பு கணக்கில் வரவு வைத்து வந்தனா்.
இந்நிலையில் மாத சந்தாவுடன் கூடுதலாக சேமிப்புத்தொகை வசூல் செய்ய வேண்டாம் என நிதிநிறுவனம் அறிவித்திருந்ததாம். எனினும, வசூல் மேலாளா்களான திருக்குறுங்குடியைச் சோ்ந்த கிஷோா்(24), வள்ளியூா் ஜெயபாலன்(22), கிழவனேரி ஞான பிரவீன்(22), நவீன் முகேஷ் ஆகிய 4 பேரும் தொடா்ந்து வாடிக்கையாளா்களிடம் மாதம் ரூ.200 வசூல் செய்ததுடன், வாடிக்கையாளா்கள் கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து நிதி நிறுவன மேலாளா் வள்ளியூா் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், கிஷோா் ரூ.93,200, ஜெயபாலன் ரூ.89,800, ஞானபிரவீன் ரூ.72,200, நவீன் முகேஷ் ரூ.40,000 என ரூ.2.95 லட்சம் கையாடல் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளாா். அதன்பேரில், 4 போ் மீது வழக்கு பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.