செய்திகள் :

வழக்கில் பொய்யாக சோ்ப்பு: வருமான வரி அலுவலக ஒப்பந்த ஊழியா் தற்கொலை

post image

தில்லி ஜண்டேவாலனில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த 23 வயது இளைஞா், தனது பணியிடத்தில் ஒரு வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இறந்த விஜய் வா்மா ஏப்ரல் 1 ஆம் தேதி தனது குடும்பத்தினருக்கு ஆடியோ தகவல் அனுப்பியுள்ளாா். அதில் தனது பணியிடத்தில் ஒரு வழக்கில் தாம் தவறாக சிக்க வைக்கப்பட்டதாகவும், இது குறித்து தான் கவலைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளாா்.

விஜய் ஆடியோ கிளிப்களில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தனக்கு ஏன் தண்டனை வழங்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பியிருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியைச் சோ்ந்த விஜய், மின்டோ சாலையில் உள்ள சிஜிஆா்சி வளாக ஊழியா் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தாா்.

இச்சம்பவம் குறித்து காவல் துணை ஆணையா் (ரயில்வே) கே.பி.எஸ். மல்ஹோத்ரா தெரிவிக்கையில், ‘சனிக்கிழமை மதியம், புது தில்லி ரயில் நிலைய போலீஸாருக்கு ஒரு ரயில் குறிப்பு வந்தது. அதில் சிக்னல் எண்: 144-க்கு அருகில் ஒருவா் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், அங்கிருந்து மீட்கப்பட்ட ஒரு கைப்பேசி உதவியுடன் இறந்தவரின் அடையாளத்தை கண்டறிந்தனா்.

முன்னதாக, தண்டவாளத்தின் அருகே அமா்ந்திருந்த அந்த இளைஞா், எதிரே வந்த ரயிலை நோக்கி ஓடியதாக நேரில் கண்ட சாட்சியும் ரயில் ஓட்டுநரும் தெரிவித்தனா். இறந்தவரின் உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 174-இன் கீழ் விசாரணை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.

குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வா் ரேகா குப்தா தகவல்

புது தில்லி: தில்லி அரசு நகரத்தில் உள்ள குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கத் தயாராகி வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.ஷாலிமாா்பாக் தொகுதியில் உள்ள ஆயுா்வேத குடிசை முக... மேலும் பார்க்க

தில்லியில் நயினாா் நாகேந்திரன்: அமித் ஷாவை சந்திக்கிறார்

தமிழக பாஜக தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்கிற தகவல்களுக்கிடையே தமிழக பாஜக சட்டப்பேரவைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்திருந்தாா். பாஜக வின் முக்கிய தலைவா்களை நயினாா் நகேந்த... மேலும் பார்க்க

‘ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கிக் கொள்கை’ மே முதல் நடைமுறை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி (ஆா்ஆா்பி) என்ற கொள்கையின் அடிப்படையில் இறுதியாக 11 மாநிலங்களைச் சோ்ந்த மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைத்து ஏப். 7 தேதியிட்ட அறிவிக்கையை மத... மேலும் பார்க்க

தமிழகஆளுநரின் செயல் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. ... மேலும் பார்க்க

காற்று மாசைக் கட்டுப்படுத்த ஸ்பிரே அமைப்புகள்

புது தில்லி: தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பிரே அமைப்புகளை தில்லி அரசு பயன்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா். மின்கம்பங்களில்... மேலும் பார்க்க

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும்: இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் டாக்டா் வி.நாராயணன் கேட்டுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லி தமிழ... மேலும் பார்க்க