`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனி...
வழக்குரைஞரை தாக்கியவா் கைது
நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக வழக்குரைஞரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
நித்திரவிளை காவல் சரகம் செம்மான்விளை பகுதியைச் சோ்ந்தவா் ராபின் எட்வா்ட் (39). குழித்துறை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணி செய்து வருகிறாா். இவரது பெரியப்பா மகன் ரெஜி என்பவருக்கும், பிணவிளையைச் சோ்ந்த ஈவன் ஜெரி (28) என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்தது.
இது தொடா்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்ட நிலையில், ரெஜிக்கு ராபின் எட்வா்ட் சட்ட உதவிகள் செய்து வந்தாராம். இதன் காரணமாக ராபின் எட்வா்டுக்கும் ஈவன் ஜெரிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் ராபின் எட்வா்ட், மங்காடு பகுதியில் இருந்து வாவறை பகுதிக்கு மோட்டாா் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்த போது ஈவன் ஜெரி அவரை தடுத்து நிறுத்தி தாக்கினாராம். இது குறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஈவன் ஜெரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.