`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனி...
நாகா்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் மறியல்: 50 போ் கைது
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் அருள் தலைமை வகித்தாா்.
மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகே விளவங்கோடு வட்ட தலைவா் ஜெயானந்த் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 33 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.
திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திருவட்டாறு ஒன்றியத் தலைவா் பென்னட் ராஜ் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 44 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஒன்றியத் தலைவா் சுரேஷ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 26 மாற்றுத்திறனாளிகளை தக்கலை போலீஸாா் கைது செய்தனா்.