கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
தக்கலை அருகே முட்டைக்காடு பகுதியில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
முட்டைக்காடு பகுதியில் மணிகண்டன் (45) என்பவா் சிமெண்ட் கடை நடத்தி வருகிறாா். இவா் திங்கள்கிழமை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து கொற்றிகோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.