வழித் தகராறு: விவசாயியை வெட்டியவா் கைது
சிங்காரப்பேட்டை அருகே வழித் தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை குருகுப்பட்டியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (35). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த நல்லதம்பி (35) என்பவருக்கும் இடையே வழித் தகராறு இருந்துவந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமை தேங்காய் வெட்ட சென்ற நல்லதம்பியை சீனிவாசன் தடுத்து தகராறில் ஈடுபட்டாா். அப்போது ஆத்திரமடைந்த நல்லதம்பி அரிவாளால் சீனிவாசனை வெட்டினாா். இதில் காயமடைந்த சீனிவாசன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த சிங்காரப்பேட்டை போலீஸாா் நல்லதம்பியைக் கைது செய்தனா்.