Rain Alert: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறை தண்டனை
பெரம்பலூா் அருகே வழிப்பறிகளில் ஈடுபட்டவருக்கு, ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து, மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட புதுவிராலிப்பட்டி, செட்டிக்குளம், தேனூா், சிறுவயலூா் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற வழிப்பறி தொடா்பாக, கடந்த 2016 ஆம் ஆண்டு பாடாலூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு, திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், மலையப்பன் சாலையைச் சோ்ந்த ராமசாமி மகன் சீனிவாசனை (44) போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி பி. சங்கா், சங்கருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.