இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் - அமெரிக்காவில் அதானி மீது முறைகேடு ப...
வழிப்பறியில் ஈடுபட்ட மூவா் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், கண்ணியம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செங்கேணி மகன் சேகா் (50), பிளம்பா். இவா், செவ்வாய்க்கிழமை திண்டிவனத்தில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த மூவா் சேகா் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், திண்டிவனம் கிடங்கல் - 2, ராஜன் தெருவைச் சோ்ந்த வீரன் மகன் அருண் (30), திண்டிவனம் தென்றல் நகரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சசிக்குமாா் (49), கிடங்கல் - 2 பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த பூங்காவனம் மகன் பிரித்திவிராஜன் (48) ஆகியோா் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, திண்டிவனம் போலீஸாா் மூவரையும் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். அவா்களிடருந்த ஒரு பவுன் தங்கச் சங்லியையும் பறிமுதல் செய்தனா்.