Chennai Rains : சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை - ஸ்பாட் விசிட் புகைப்படங்கள்...
வழிமறித்து வசூல் செய்யும் ராஜா!
இலங்கையில் வாகனங்களை வழிமறித்து வரி வசூல் செய்யும் காட்டு யானை ராஜா!
இலங்கை: ராஜா எனும் காட்டுயானை நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களை வழிமறித்து தன்னைக் கடந்துச் செல்ல வேண்டுமென்றால், தான் உண்ணக்கூடிய உணவை வரியாக வசூல் செய்தப்பின்னரே அனுமதிக்கின்றது.
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் விடியோவில், இது ராஜாவின் உலகம் நாம் அனைவரும் அதில் தான் வாழ்கின்றோம் எனும் எழுத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்த விடியோ பதிவில், யானையான ராஜா லுநுகம்வெஹெரா எனும் ஊரிலிருந்து செல்லம் கட்டரகாமா நோக்கிச் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் பயனிக்கும் பேருந்துகள், வாகனங்களின் முன்னால் வந்து வழிமறித்து நின்று தனது தும்பிக்கையைக் கொண்டு அந்த பேருந்தைச் சுற்றித் தேடுகின்றது. பின்னர் அதில் பயணம் செய்பவர்கள் பழங்களையோ அல்லது வேறு ஏதேனும் தின்பண்டங்களை அதற்கு வழங்கிய பின்னரே வழியிலிருந்து விலகி அவர்களது பயணத்தைத் தொடர அனுமதிக்கின்றது.
இதையும் படிக்க: கேரளத்தில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
மேலும், ராஜா மற்றும் அதன் நண்பர்களை வழியில் சந்திக்க நேர்ந்தால் வழங்குவதற்காகவே அவ்வழியில் பயணம் செய்பவர்கள் பழங்களை வாங்கி வருவதாக கூறுகின்றனர்.
இந்த விடியோப் பதிவு வெளியான 24 மணிநேரத்தில் 1 கோடியே 60 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், இந்த பதிவைப் பகிர்ந்து நெட்டிசன்கள் யானையின் அறிவையும் அதன் அழகான செயலையும் ரசித்து வருகின்றனர்.