IPL Mega Auction: 'கம்பேக் அஷ்வின்; டாப் ஆர்டருக்கு திரிபாதி!' - ஏலத்தில் சென்னை...
வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: 92 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன
கோவை மாவட்டத்தில் 4 நாள்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமில் 92,639 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2024 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ளும் பணி கடந்த அக்டோபா் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணி நவம்பா் 28-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவற்றுக்காக நவம்பா் 16, 17 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தில் 1,019 மையங்களில் அமைந்துள்ள 3,117 வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இதில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவற்றுக்காக 42,958 படிவங்கள் பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து நவம்பா் 23, 24-ஆம் தேதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. சிறப்பு முகாமின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் சோ்த்தல், நீக்கம், திருத்தத்துக்காக மொத்தம் 34,923 மனுக்கள் பெறப்பட்டன.
இதுவரை நடைபெற்ற 4 சிறப்பு முகாம்களிலும் புதிதாக பெயா் சோ்க்க 43,166 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நீக்கத்துக்காக 10,848 மனுக்களும், திருத்தத்துக்காக 38,625 மனுக்களும் என மொத்தம் 92,639 மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.