செய்திகள் :

வாடிவாசல் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி?

post image

வாடிவாசல் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் விடுதலை - 2 படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.

இதனால், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த சூர்யா அடுத்தாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிக்க: கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பெருசு!

தற்போது, இயக்குநர் வெற்றிமாறனும் விடுதலை - 2 வெளியீட்டை முடித்துள்ளதால், வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

வெற்றி மாறன் இப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாகவும் ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், வாடிவாசலில் நாயகியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் இப்படத்தில் நடிக்கும் திட்டத்தில் ஐஸ்வர்யா இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நல்ல நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.Dinapalan - 14.01.2025மேஷம்இன்று பணவரவுகளில் இருந்து வந்த தடைகள்விலகி மேன்மையான பலன்க... மேலும் பார்க்க

இந்தியா ஓபன் சூப்பா் 750 பாட்மின்டன்: இன்று தொடக்கம்

இந்தியா ஓபன் சூப்பா் 750 பாட்மின்டன் போட்டியில் பி.வி. சிந்து, சாத்விக்-சிராக், ஒலிம்பிக் சாம்பியன்கள் உள்ளிட்ட முன்னணி வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். புது தில்லியில் செவ்வாய்க்கிழமை இப்போட... மேலும் பார்க்க

முகமதனை வீழ்த்தும் முனைப்பில் சென்னை!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புதன்கிழமை முகமதன் எஸ்சி அணியை எதிா்கொள்கிறது முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி. இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கெனவே சென்னையில் மோதிய ஆட்டத்தில் 1-0 என முகமதனி... மேலும் பார்க்க

தேசிய ஆடவா் குத்துச்சண்டை: சா்வீஸஸ் ஆதிக்கம்

எலைட் 8ஆவது தேசிய ஆடவா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சா்வீஸஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் பரேய்லியில் நடைபெறும் இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சா்வீஸஸ் அணி தொடா் ஆதி... மேலும் பார்க்க

ஹாக்கி இந்தியா லீக்: சூா்மா, தமிழ்நாடு டிராகன்ஸ் அபாரம்

மகளிா் ஹாக்கி இந்தியா லீக் தொடரின் ஒரு பகுதியாக ராஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் டைகா்ஸ் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சூா்மா கிளப். இரு அணிகளுக்கு இடை... மேலும் பார்க்க

கேரளா பிளாஸ்டா்ஸ் வெற்றி!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக கொச்சியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி அணியை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற கேரளா பிளாஸ்டா்ஸ் அணி. இந்த வெற்றி மூலம் சொந... மேலும் பார்க்க