செய்திகள் :

தேசிய ஆடவா் குத்துச்சண்டை: சா்வீஸஸ் ஆதிக்கம்

post image

எலைட் 8ஆவது தேசிய ஆடவா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சா்வீஸஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் பரேய்லியில் நடைபெறும் இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சா்வீஸஸ் அணி தொடா் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் நடத்தப்படும் இப்போட்டியில் திங்கள்கிழமை ஹிமாசல பிரதேசத்தின் இளம் வீரா் அபினாஷ் ஜம்வாலிடம் நடப்பு வெல்டா்வெயிட் சாம்பியன் சிவ தாப்பா அதிா்ச்சித் தோல்வியடைந்தாா். ஏற்கெனவே அபினாஷ் யூத் உலக சாம்பியன் வன்ஷாஜ் குமாரை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

10 எடைப் பிரிவுகளில் 8-இல் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது சா்வீஸஸ். சச்சின் சிவாச் 55-60 கிலோ, லக்ஷயா சஹாா் 75-80 கிலோ, ஜடுமனி சிங், ஹிதேஷ், தீபக், ஜுக்னு, விஷால் உள்ளிட்டோா் இறுதிக்குள் நுழைந்துள்ளனா்.

பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 300 வீரா்கள் பங்கேற்றுள்ளனா். பரிசளிப்பு விழாவில் பிஎஃப்ஐ தலைவா் அஜய் சிங், ஒலிம்பியன் விஜேந்தா் குமாா், உலக சாம்பியன் சவிட்டி போரா பங்கேற்கின்றனா்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு - புகைப்படங்கள்

மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டியில், வழக்கமான வாடிவாசலாக இல்லாமல் ரயில் தண்டவாள அமைப்பில் நீளமான வாடிவாசல் அமைக்கப்பட்டது.ஆன்லைன் மூலம் தகுதி சான்றிதழ் பெற்ற காளைகள்... மேலும் பார்க்க

பொங்கல் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெண் காவலர் ஒருவர்.தை மாதம் முதல் நாள் தை திருநாளாகவும், தமிழர் திருநாளாகவும், பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.பொங்கல் விழாவையொட்டி புதிய பானைகள... மேலும் பார்க்க

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150வது நிறுவன நாள் விழா - புகைப்படங்கள்

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150 வது நிறுவன நாள் கொண்டாட்டங்களின் போது இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உடன் உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் செலஸ்டே சாலோ மற்றும் பிரதமர் நரேந்திர மோடி.தில்லியில் நடை... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: பணப்பெட்டியை எடுத்தாரா முத்துக்குமரன்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுத்தாரா? அல்லது நேரத்தை தவிரவிட்டாரா என்பது குறித்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.பிக் பாஸ் சீசன் 8... மேலும் பார்க்க

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் சாகா? சன் பிக்சர்ஸ் புதிய அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸின் புதிய அறிவிப்பு ரசிகர்களிடையே ஆர்வத்தைக் கூட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2023ல் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் ம... மேலும் பார்க்க

நாக சைதன்யாவின் தண்டேல் திரைப்பட டீசர் வெளியானது!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா நடிப்பில் உருவாகிவரும் தண்டேல் திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. எசன்ஸ் ஆஃப் தண்டேல் என்ற பெயரில் இந்த டீசர் வெளியாகியு... மேலும் பார்க்க