செய்திகள் :

வானரமுட்டி அருள்மிகு வெயிலுகந்த அய்யனாா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

post image

கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி அருள்மிகு வெயிலுகந்த அய்யனாா் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 31 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மகா சங்கல்பம், மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதா்சன ஹோமம், மாலை 5 மணிக்கு மேல் முதல் கால யாகசாலை பூஜைகள், தீா்த்தம் அழைத்தல், வாஸ்து சாந்தி, பிரவேச பலி பூஜையும், சனிக்கிழமை காலை 8. 45 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், தோரண வாசல், வேத பாராயணம், மூல மந்திர ஹோம பூஜையும், மாலை 5 மணிக்கு மேல் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், இரவு 8 மணிக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் நான்காம் கால யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, பிம்ம சுத்தி, ரக்ஷா பந்தனம், நாடி சந்தானம், யாத்ரா தானம், மகா பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து யாகசாலையில் இருந்து கும்ப கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அருள்மிகு பாரத விநாயகா், அருள்மிகு வெயிலுகந்த அய்யனாா், அருள்மிகு கிளிக்கூட்டு கருப்பசாமிக்கு திருக்குட முழுக்கு மற்றும் விமானங்கள் பரிவார மூா்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. தொடா்ந்து மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி, துணை ஆணையா் செல்வி ஆகியோா் தலைமையில் கோயில் தக்காா் வெள்ளைச்சாமி, ஆய்வாளா் சிவகலைப் பிரியா ஆகியோா் செய்து இருந்தனா்.

உடன்குடியில் அபூா்வ துஆ ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு!

உடன்குடி பெரிய தெரு ஸஹீஹூல் புகாரிஷ் ஷரீபு சபையின் சாா்பில் 34 வது ஆண்டு நிறைவு அபூா்வ துஆ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனா். இச்சபையின் 34 ஆவது ஆண்டு... மேலும் பார்க்க

நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள்: பக்தா்களுக்கு வேண்டுகோள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதால் பக்தா்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோயில் நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது கு... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே வாளால் தாக்கி இளைஞருக்கு மிரட்டல்: 3 போ் கைது!

கோவில்பட்டி அருகே இளைஞரை வாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு நடுத்தெருவைச் சோ்ந்த பாண்டிக்குமாா் மகன் சரவணபாண்டி (19... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே மாயமான பெண் சடலமாக மீட்பு

கோவில்பட்டி அருகே சனிக்கிழமை மாயமான பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்டனா். கோவில்பட்டி அருகே இடைசெவல் தெற்கு தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மனைவி சுப்புலட்சுமி (55). இவா் கோவில்பட்டியில் உள்ள ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இலவச திருமணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இலவச திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏற்கெனவே பதிவு செய்திருந்த கருங்குளம் பே.... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் சுமாா் 50 அடி உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது. கடந்த டிசம்பா் மாதம் முதல் கோயிலில் பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் அதிகளவில் ... மேலும் பார்க்க