செய்திகள் :

வானில் ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்கள்.. அபூர்வ அணிவகுப்பு தொடங்கியது!

post image

வானில் ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்கள் அணிவகுத்து வரும் நிகழ்வானது ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ஆம் தேதி வரை நிகழவிருக்கிறது.

வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயத்தை நேற்று முதல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஆவலுடன் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

எவ்வளவோ தொலைவில் அதனதன் சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் ஏழு கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் ஒரே டிகிரிக்குள் ஒரே நேரத்தில் வருவதால், அவற்றை நம்மால் காண முடியும் என்பதால் நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் மற்றும் புதன் ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நிற்கும் அதிசய நிகழ்வானது ஜனவரி 21 ஆம் தேதி முதல் தொடங்கியிருக்கிறது.

இது குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருப்பதற்குக் காரணம், இந்த கோள்கள் அனைத்தும் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பது மட்டுமல்ல, அந்தக் கோள்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைவுகளில் சுற்றிக்கொண்டிருப்பதும்தான்.

இவ்வாறு ஏழு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நின்று, இரவு நேரத்தில் வானத்தில் ஓர் அழகிய அரை வட்டத்தை உருவாக்கிக் காண்பவர்களின் நினைவில் நீங்கா ஒரு அனுபவமாக இடம்பிடிக்கும்.

எப்போது காணலாம்?

சூரியன் மறைந்து, முழுவதும் இருள் சூழ்ந்த பிறகு உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணி முதல் பார்க்கலாம். ஆனால், வெள்ளி, சனி மற்றும் நெப்ட்யூன் கோள்கள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதற்கு இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு ஆகலாம். அது அவரவர் இருக்கும் இடத்தைப் பொருத்தது. அதன் பிறகு மேலும் சில மணி நேரங்களில் செவ்வாய், வியாழன், யுரேனஸ் கோள்களும் இவற்றுடன் அணிவகுக்கும். சூரிய உதயத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு செவ்வாய் மறைந்துவிடும்.

பொதுவாகவே, ஒன்றிரண்டு கோள்கள் ஒன்றாக நெருங்கி வரும். அதனை வானில் அவ்வப்போது காணலாம். ஆனால், ஒன்றல்ல இரண்டல்ல ஏழு கோள்கள் ஒன்றாக அணிவகுத்து வருவதும், இரவு நேரத்தில் பார்க்க முடிவதும் வழக்கமான ஒன்றல்ல. அபூர்வம்தான்.

அதுவும், கோடு போட்டதுபோல, ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்களும் ஒன்றாக அணிவகுப்பதும் அதிசயமே அசந்துபோகும் நிகழ்வு.

கோயில் அருகே போதைப்பொருள் விற்பனை: தடை கோரிய மனு நிராகரிப்பு!

புது தில்லி: கோயில்களுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பொது நல மனுதாரரான அ... மேலும் பார்க்க

ரூ.1 கோடி வெகுமதி: 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நக்சல் தலைவரைக் காட்டிக்கொடுத்த செல்ஃபி!

ஏறக்குறைய முப்பது ஆண்டு காலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த நக்சல் மத்தியக் குழு உறுப்பினர், தனது மனைவியுடன் எடுத்த செல்ஃபி எப்படி அவருக்கு ஆபத்தாக முடிந்தது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒடிசா - ச... மேலும் பார்க்க

அதானி வீட்டு திருமணம்: ரூ. 5,000 கோடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

ஜீத் அதானியின் திருமணம் பெரும் பொருள் செலவில் நடைபெறவிருப்பதாகப் பரவிய வதந்திகளுக்கு கௌதம் அதானி மறுப்பு தெரிவித்துள்ளார்.தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்தாண்டு ஜூலை... மேலும் பார்க்க

மணிப்பூரில் பாஜக கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெற்றார் நிதீஷ் குமார்!

மணிப்பூரில் பாஜக கூட்டணிக்கான ஆதரவை நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் திரும்பப் பெற்றுள்ளது. மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிகார் முதல்வ... மேலும் பார்க்க

உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை சந்தித்த சைஃப் அலிகான்!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்னதாக தனது உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்து சைஃப் அலிகான் நன்றி தெரிவித்தார்.மும்பையில் கடந்த 16-ஆம் தேதி அதிகாலை சைஃப் அலி கான் வீட்டு... மேலும் பார்க்க

நடுத்தர மக்களுக்காக.. 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த ஆம் ஆத்மி!

நடுத்தர மக்களை மையமாகக் கொண்டு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கேஜரிவால் வெளியிட்ட விடியோ பதிவில், ஆம் ஆத்மி எம்பிக்கள் நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்னையை... மேலும் பார்க்க