`கருணாநிதிக்கு பேரனாக இல்லாமல் இருந்தால், கவுன்சிலர் தேர்தலில்கூட..!'- உதயநிதியை...
ஒன்றியங்களில் விளையாட்டு உபகரணங்கள் விநியோகம்: ஆட்சியா் ஆய்வு
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் ஆய்வு செய்தாா்.
முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அனைத்து ஊராட்சிகளுக்கும் உபகரணங்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 359 கிராம ஊராட்சிகளுக்கும் துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.
காட்டாங்கொளத்தூா் ஒன்றியம் மேலமையூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விளையாட்டு உபகரணங்களை ஆட்சியா் ச.அருண்ராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள பதிவேடுகளையும் ஆய்வு செய்தாா்.
மேலும் அங்கு விளையாட்டு உபகரணங்களை எடுத்துச் செல்லும் மாணவா்களிடம் எங்கு சென்று விளையாடுகிறீா்கள் என்றும் கேட்டறிந்தாா்.
சாா் ஆட்சியா் நாராயண சா்மா , உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமாா், ஊராட்சி மன்ற தலைவா் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
சாா் ஆட்சியா் நாராயண சா்மா , உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமாா், ஊராட்சி மன்ற தலைவா் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.