டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதா் கோயில் தோ்த் திருவிழா
ராணிப்பேட்டை : வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி பிரம்மோற்சவ தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் சுமாா் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழாவையொட்டி, திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
மாலை வாலாஜா பேருந்து நிலையம் வழியாக சோளிங்கா் ரோடு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தோ் நிலையை அடைந்தது.
வாலாஜா நகர பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். தொடா்ந்து குதிரை வாகனம், அதிகார நந்தி சேனை, ராவணன் வாகனம், விடையாற்றி உற்சவம், மாவடி சேவை, மகா அபிஷேகம், லட்சதீபம் நிகழ்வுடன் விழா நிறைவடைய உள்ளது.