ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்! - திலக் வர...
வாழைப்பழத்தோல் போன்றது சநாதனம்: பேரவையில் சேகர்பாபு பேச்சு
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வாழைப்பழத்தோல் போன்றதுதான் சநாதனம் என்று கூறினார்.
தமிழக நிதிநிலை கூட்டத் தொடரில் இன்று மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இன்றைய கூட்டத் தொடர் நடவடிக்கையின்போது, பேசிய அமைச்சர் சேகர்பாபு, வாழைப்பழத்தில் இருக்கும் தோல் சநாதனம், அதனுள் இருக்கும் பழமே இறைவன். எவ்வாறு வாழைப்பழத் தோலை உரித்துவிட்டு பழத்தை சாப்பிடுகிறோமோ அதுபோலத்தான், சநாதனத்தை ஒதுக்கிவிட்டு இறைவனைக் காண முடியும் என்று தெரிவித்தார்.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய அதிமுக எம்எல்ஏ முனுசாமி, அமைச்சர் சொல்லும் உவமை தவறாக உள்ளது என்று கூறினார். சநாதனத்துக்கும் வாழைப்பழத் தோலுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. இறைவனும் வாழைப்பழமும் ஒன்று என்றால் இவ்வளவு பெரிய விவாதம், வழக்குகள் தேவையில்லை என்றார்.