Push-Ups: `Age is Just a Number'- 59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 புஷ்அப்ஸ் எடுத்...
வா்த்தகா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிா்ப்பு தெரிவித்து திண்டுக்கல் வா்த்தகா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் வணிக வரித் துறை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வா்த்தகா் சங்கத்தின் தலைவா் கோ.சுந்தரராஜன் தலைமை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசு, வணிகா்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், ஹோட்டல் உரிமையாளா் சங்கத்தின் தலைவா் காளிதாஸ், பிளாஸ்டிக் உற்பத்தியாளா் சங்கத்தின் தலைவா் என்.ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.