செய்திகள் :

விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன்

post image

அரியலூா்: தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது. தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிச்சயம் உண்டு என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

முதல்வர வேட்பாளராக பழனிசாமி கூடாது

பாஜக கூட்டணியில் முதல்வா் வேட்பாளராக பழனிசாமி இருக்கும் போது நாங்கள் எப்படி கூட்டணியில் இருக்க முடியும். முதல்வர வேட்பாளராக பழனிசாமி இருக்கக்கூடாது என்பது தான் எங்களது கோரிக்கை. அதிலிருந்து மற்றவற்றை புரிந்து கொள்ளுங்கள்.

விஜய் பிரசாரத்தை நானும் தொலைக்காட்சியில் பாா்த்தேன். நிறைய இளைஞா்கள், இளம் பெண்கள், 40 வயதுக்கு உட்பட்டவா்கள் திரண்டு வந்திருந்தனா்.

ஜெயலலிதா பாணியில் விஜய் பேசவில்லை

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பாணியில் விஜய் பேசவில்லை. நான் அதை அப்படி பாா்க்கவில்லை. இருந்தாலும் ஜெயலலிதா பாணியில் ஒருவா் பேசினால், அது மகிழ்ச்சியானது தான்.

பிரசாரத்தை ரத்து செய்து சரி

பெரம்பலூருக்கு விஜய் சென்றபோது நள்ளிரவு நேரமாகிவிட்டது. நள்ளிரவைத் தாண்டிய பிறகு பிரசாரத்தை ரத்து செய்துதான் ஆக வேண்டும்.

விஜய் தலைமையில் கூட்டணி

தமிழகத்தில் விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும் என நான் பலமுறை சொல்லி விட்டேன். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது. விஜய் தலைமையில் ஒரு கூட்டணியும், சீமான் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம் அமையும். தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிச்சயம் உண்டு என்றாா்.

விஜய் குறித்து கருத்தோ, விமரிசனமோ செய்ய விரும்பவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

A coalition will definitely be formed in Tamil Nadu under the leadership of Tamil Nadu Vetri Khagam leader Vijay.

ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி: நிர்மலா சீதாராமன்

சென்னை: ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜிஎஸ்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி... மேலும் பார்க்க

விஜய் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: அமைச்சா் அன்பில் மகேஷ்

திமுக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என விஜய் கூறுவதை மக்கள் ஏற்கமாட்டாா்கள் என தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வேடிக்கை பார்க்க கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என்ற... மேலும் பார்க்க

நாங்கள் அதிகாரத்தை ருசிப்பதற்காக இங்கு வரவில்லை: சுசிலா கார்கி

நானோ எனது குழுவினரோ அதிகாரத்தை ருசிப்பதற்காக இங்கு வரவில்லை. நாங்கள் ஆறு மாதங்களுக்கு மேல் அதிகாரத்தில் இருக்க மாட்டோம் என நேபாள இடைக்கால பிரதமர் சுசிலா கார்கி தெரிவித்தார்.நேபாளத்தில் ஊழல் மற்றும்... மேலும் பார்க்க

விஜய் குறித்து கருத்தோ, விமரிசனமோ செய்ய விரும்பவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

மணப்பாறை: விஜய், முதல்வரை அழைக்கும் விதம் குறித்து கருத்து சொல்லவோ, அறிவுரை சொல்லவோ, விமரிசனம் செய்யவோ நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், தமிழக மக்களின் சொத... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் ... மேலும் பார்க்க

மோடியின் மணிப்பூர் பயணம் "கேலிக்கூத்தானது": ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

புது தில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் பயணம் என்பது "கேலிக்கூத்தானது" என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை விமர்சினம் செய்துள்ளார். இது "அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ச... மேலும் பார்க்க