உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து: மக்களை சிரிக்க வைப்பதே குறிக்கோள்! யூடியூபர் வ...
விஜய் தேவரகொண்டாவின் புதிய படம்: டீசர் வெளியீடு!
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12 வது திரைப்படமான ’கிங்டம்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா நுவ்விலா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பெல்லி சூப்புலு, எவடே சுப்ரமணியம் போன்ற படங்களில் நடித்த இவர் ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார்.
இவர் கடைசியாக கல்கி திரைப்படத்தில் அர்ஜுனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.
சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
’கிங்டம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசருக்கு தமிழில் நடிகர் சூர்யாவும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆரும் பிண்ணனி குரல் கொடுத்துள்ளனர்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெறுவதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வருகிற மே 30 அன்று தமிழ். தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.